வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை உளவு பார்க்கும் வடகொரிய செயற்கைக்கோள்

November 28, 2023

கடந்த சில தினங்களுக்கு முன், வடகொரியா உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் ஆகியவற்றை உளவு பார்க்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் ஆகியவற்றின் புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படை நிலையத்தின் புகைப்படத்தையும் இந்த செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது. அத்துடன், ரோம், ஆண்டர்சன் விமானப்படைத்தளம், பேர்ல் துறைமுகம் ஆகிய புகைப்படங்களும், அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான கார்ல் […]

கடந்த சில தினங்களுக்கு முன், வடகொரியா உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் ஆகியவற்றை உளவு பார்க்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் ஆகியவற்றின் புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படை நிலையத்தின் புகைப்படத்தையும் இந்த செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது. அத்துடன், ரோம், ஆண்டர்சன் விமானப்படைத்தளம், பேர்ல் துறைமுகம் ஆகிய புகைப்படங்களும், அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான கார்ல் வின்சன் புகைப்படத்தையும், செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது. ஆனால், புகைப்படங்கள் எதையும் வடகொரியா வெளியிடவில்லை. வரும் டிசம்பர் 1 முதல், இந்த செயற்கைக்கோள், உளவு பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படும் என வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu