உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது - வடகொரியா

November 22, 2023

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி விட்டோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது.வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை சோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து செய்து வருகிறது. முன்னதாக உளவு செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என்று அறிவித்திருந்தது. இந்த உளவு செயற்கைக்கோளானது ஜப்பான் கொரிய தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதன் […]

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி விட்டோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது.வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை சோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து செய்து வருகிறது. முன்னதாக உளவு செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என்று அறிவித்திருந்தது. இந்த உளவு செயற்கைக்கோளானது ஜப்பான் கொரிய தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதன் மூலம் தங்களது பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்று வடகொரியா கூறி இருந்தது. இந்த ஏவுகணையை செலுத்தினால் வடகொரியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இதனை மீறி சில மாதங்களுக்கு முன் உளவு பார்க்கும் செயற்கைக்கோளை வட கொரியா செலுத்தியது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில் தான் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது. அதனால் அந்நாட்டிற்கு முன்பே தகவல் தெரிவித்தது. இந்நிலையில் உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்ததாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த செயல் ஐநா தீர்மானத்தை மீறியதாகும். நமது நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான செயல் என்று தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு துணை மந்திரி கூறியுள்ளார். அதோடு 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட கொரிய பதட்டம் குறைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu