வடகொரியாவை தென்கொரியாவுடன் இணைக்கும் வகையில் உள்ள ரயில் தண்டவாளங்களை வடகொரியா தகர்த்தது.
வடகொரியா - தென் கொரியா இடையே சமீப காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தென் கொரியா நட்பு கொண்டு வருவதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடுமையாக எதிர்க்கிறார். அதையடுத்து அவர் வட கொரியாவில் தென் கொரியா உடனான நட்புறவை குறிக்கும் சின்னங்கள், நினைவு கட்டிடங்கள் போன்றவற்றை அழிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், வடகொரியாவை தென்கொரியாவுடன் இணைக்கும் வகையில் உள்ள ரயில் தண்டவாளங்களை கன்னிவெடி வைத்தும் வெடிகுண்டுகளை வீசியும் தகர்த்து வருவதாக தென் கொரிய உளவு அமைப்பு கூறியுள்ளது. இந்த செயலை வடகொரிய இராணுவத்தினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கிழக்கு பகுதியில் டாங்கே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்கள் அழிக்கப்படுகின்றன. இது குறித்து வட தெரிய வட கொரியா தரப்பில் கூறப்படுவதாவது, 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கில் ஜாங்குய் மற்றும் கிழக்கில் டாங்கே பகுதியில் உள்ள தண்டவாளங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. தென் கொரியா உடன் வடகொரியா வரும் காலங்களில் சமாதானமாக செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.














