தென் கொரியா மீது 200 பீரங்கி குண்டுகள் வீச்சு

January 6, 2024

தென் கொரியா மீது சுமார் 200 ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது வடகொரியா. தென் கொரியாவின் யோன் பியோங் தீவு பகுதியை குறிவைத்து இன்று வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் அந்த தீவுப் பகுதியின் கடல் பகுதியில் விழுந்தன. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது தென்கொரியா. […]

தென் கொரியா மீது சுமார் 200 ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது வடகொரியா.

தென் கொரியாவின் யோன் பியோங் தீவு பகுதியை குறிவைத்து இன்று வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் அந்த தீவுப் பகுதியின் கடல் பகுதியில் விழுந்தன. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தென்கொரிய ராணுவம் உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது தென்கொரியா. இந்த தாக்குதலுக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுவதாவது இது கொரிய தீபகற்பத்தில் அமைதியை அச்சுறுத்தும் செயலாகும். இந்த நெருக்கடிக்கு வடகொரியா முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் மிகக் கடுமையாக அவர்களை எச்சரித்து இந்த நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம். எங்கள் ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து நடப்பவற்றை உன்னிப்பாக கண்காணிக்கிறது. வடகொரியாவின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu