வடகொரியாவின் கிழக்கு துறைமுகத்திலிருந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தென் கொரியா கூறியுள்ளது.
வட கொரியா அதன் கிழக்கு ராணுவ துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் ஏவுகணை சோதனைகள் நடத்தியதாக தென்கொரியா கூறியுள்ளது. இந்த சோதனையில் ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் அவை பயணித்த தொலைவு குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிகழாண்டில் வடகொரியா இது மூன்றாவது முறையாக சோதனையை நடத்தியுள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திட எரிபொருள் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. வடகொரியாவின் ஆயுதத்திறனை அதிகரிக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் கிம் ஜான் ஈடுபட்டுள்ளார். அணு ஆயுத மோதலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சமீப காலமாக பேசி வருகிறார். இதனால் கடந்த சில மாதங்களாகவே கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து சுற்றியுள்ள நாடுகள் தங்களது ராணுவ பயிற்சிகளை விரிவுப்படுத்தி உள்ளன.