நேற்று வடகொரியா நிகழ்த்திய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நேற்று ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை சோதித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சோதனையின் போது, ஏவுகணை பாதி வழியில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.