தென் கொரியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகள் நடத்தியுள்ளது.
வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவின் கடற்கரைப் பகுதியில் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து தென்கொரிய ராணுவம் கூறுகையில், முதல் ஏவுகணை 600 கிலோ மீட்டர் பறந்ததாகவும், இரண்டாவது 120 கிலோமீட்டர் வரை பறந்ததாகவும் கூறியுள்ளது. இந்த தாக்குதல் இன்று காலை நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு, கடற்படை தாக்குதல், நீர்மூழ்கிக் கப்பல் தடுப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.