வட கொரியா ஆகஸ்ட் 24 மற்றும் 31 க்கு இடையில் உள்ள நாட்களில் செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படைக்கு வடகொரியா அறிவித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ராணுவ உளவு செயற்கைக்கோளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். கடந்த மே மாதம், வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்க முயற்சித்தது. ஆனால் அதை சுமந்து சென்ற ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கடலில் விழுந்தது. இநிலையில் இப்பொது ஏவ உள்ளது மறு முயற்சி என்று நம்பப்படுகிறது.
அமெரிக்க இராணுவ பலத்திற்கு சமநிலையான உளவு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளதாக வடகொரியா கூறியிருக்கிறது. ஆகஸ்ட் 24 மற்றும் 31 க்கு இடையில் உள்ள நாட்களில் செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படை கூறியிருக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை கடந்த மே மாதம் வட கொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதலைக் கண்டனம் செய்தன. பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை இது மீறுவதாகும் என்று கூறின.