புதிய திடப்பொருள் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

April 3, 2024

புதிய திடப்பொருள் ஏவுகணை சோதனையில் வடகொரியா, நேற்று ஈடுபட்டுள்ளது. அந்நாட்டின் ஊடகம் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக, தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில், வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், நேற்று, நடுத்தர தொலைவு செல்லக் கூடிய, திடப்பொருளால் ஆன, புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் மேற்பார்வையில் ஹவாசாங் 16 […]

புதிய திடப்பொருள் ஏவுகணை சோதனையில் வடகொரியா, நேற்று ஈடுபட்டுள்ளது. அந்நாட்டின் ஊடகம் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக, தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில், வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், நேற்று, நடுத்தர தொலைவு செல்லக் கூடிய, திடப்பொருளால் ஆன, புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் மேற்பார்வையில் ஹவாசாங் 16 பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரவ எரிபொருள் ஏவுகணைகளில், ஏவப்படுவதற்கு முன்புதான் எரிபொருளை நிரப்ப வேண்டும். அதனால், நீண்ட காலத்திற்கு எரிபொருளை சேமிக்கும் வகையிலான திடப்பொருள் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu