வட கொரியாவில் நான்காவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது
வடகொரியாவில் நான்காவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை தென்கொரியா நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. போர்த் தளவாடங்களை ஏற்றி செல்லும் திறன் வாய்ந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக வடகொரியா நடத்தி உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த ஏவுகணை, அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் படங்களையும் வடகொரியா வெளியிட்டுள்ளது.
வடகொரியா கடல் வழியாக பல ஏவுகணைகளை ஏவி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ராணுவ பலத்தை மேம்படுத்துவதற்காக தான் என்று வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.