வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

July 12, 2023

வடகொரியா தற்போது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் கடல்பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா எங்கள் நாட்டின் எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா […]

வடகொரியா தற்போது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் கடல்பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா எங்கள் நாட்டின் எல்லைக்குள் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணை ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu