தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி பல மாநிலங்களில் பெய்தது. மேலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் இதுவரை தண்ணீர் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. ஒரு சில மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த பத்தாம் தேதி நிறைவு பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி இருந்தது. அரபிக்கடலில் ஏற்படும் உருவான காற்றழுத்த தாழ்ப்பகுதி வலுவடைந்து புயலாக உருவாகி உள்ளது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் அடையாளமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது.