ஆப்கனில் நிலநடுக்கம் காரணமாக புதுடில்லி உட்பட வட மாநிலங்கள் குலுங்கின

March 22, 2023

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புதுடில்லி உட்பட வட மாநிலங்கள் குலுங்கின. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத் தொடரில் இருந்து தென் கிழக்கே 40 கி.மீ., தொலைவில் ஜுர்ம் என்ற நகரம் உள்ளது. இது, பாகிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தை மையமாக வைத்து, நேற்று இரவு 10:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 30 நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு […]

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புதுடில்லி உட்பட வட மாநிலங்கள் குலுங்கின.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத் தொடரில் இருந்து தென் கிழக்கே 40 கி.மீ., தொலைவில் ஜுர்ம் என்ற நகரம் உள்ளது. இது, பாகிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே அமைந்துள்ளது. இந்த இடத்தை மையமாக வைத்து, நேற்று இரவு 10:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 30 நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் மிகப் பெரிய அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வட மாநிலங்களான புதுடில்லி, நொய்டா, காஜியாபாத், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நொடிகள் வீட்டில் இருந்த மின் விசிறி, அலங்கார விளக்குகள் குலுங்கின. சில இடங்களில் பொருட்கள் கீழே விழும் அளவுக்கு அதிர்வு ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu