கேரளாவை சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஈஸ்டர்ன் கான்டிமென்ட்ஸில் 67 சதவீத பங்குகளை நார்வேயின் ஓர்க்லா நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஓர்க்லா நிறுவனம் கேரளாவின் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் துறையில் ரூ.150 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்த முதலீடு குறித்து ஓர்க்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி அட்லே விதார் நாகல் ஜோஹன்சன் ௯றியதாவது, நிறுவனமானது உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும், விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் முறையை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்யவுள்ளதாக ௯றினார். இது பற்றி கலந்தாலோசிக்க மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் அமைச்சரவை ௯ட்டத்தை ஏற்பாடு செய்தார். மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பேசிய முதல்வர், மசாலா பொருட்கள் தயாரிப்பில் கேரளா முன்னணியில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் மாநிலத்தின் திறனை மேம்படுத்த, உணவு பதப்படுத்தும் துறைக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று ௯றினார். அதன்படி தொழில் துறையானது 100 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு சிறப்பு நோடல் அதிகாரியை நியமித்து வ௫கிறது. இந்நிலையில் ஒர்க்லா நிறுவனத்தால் மேற்கொண்டு வரும் முதலீடுகளுக்கு கையடக்கச் சேவைகளை வழங்கும் பணி, நோடல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என முதல்வர் மேலும் கூறினார்.