நத்திங் 2 ஸ்மார்ட்போன் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் ஜூலை 21ஆம் தேதி முதல் இந்த கைபேசி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வேரியண்ட்களில் இந்த கைபேசி வெளிவந்துள்ளது.
நத்திங் கைப்பேசியின் இரண்டாவது மாடல் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு திறன், 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு திறன், 12 ஜிபி ரேம் 512 ஜிபி சேமிப்பு திறன் ஆகிய மூன்று மாடல்களில் நத்திங் 2 அறிமுகம் ஆவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கைபேசியின் விலை முறையே 44999, 49999, 54999 ரூபாய் ஆக சொல்லப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் இதர சில்லறை விற்பனையகங்களில் நத்திங் 2 கைபேசி விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கைப்பேசிக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.