ஆதாருடன் 'பான்' இணைக்காவிட்டால் வரிச்சலுகை இல்லை என அறிவிப்பு

February 6, 2023

ஆதாருடன் 'பான்' இணைக்காவிட்டால் வரிச்சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், தனி நபர்களுக்கான 61 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 48 கோடி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 13 கோடி எண்கள் இணைக்கப்படவில்லை. கடைசி நாளான மார்ச் 31க்குள் அவை இணைக்கப்படவேண்டும். இந்த இணைப்புக்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயம் நீட்டிக்கப்படாது. மார்ச் […]

ஆதாருடன் 'பான்' இணைக்காவிட்டால் வரிச்சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், தனி நபர்களுக்கான 61 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 48 கோடி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 13 கோடி எண்கள் இணைக்கப்படவில்லை. கடைசி நாளான மார்ச் 31க்குள் அவை இணைக்கப்படவேண்டும். இந்த இணைப்புக்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயம் நீட்டிக்கப்படாது.

மார்ச் 31க்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் ஏப்ரல் முதல் செயலற்றதாகிவிடும். வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu