முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ' C ' மற்றும் ' D ' பிரிவு தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் வலிக்கும் வகையில் 2022-23ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்கப்பட உள்ளது. இது மிக ஊதிய சட்டம் 2015 படி ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூபாய் 21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நிதி ஊதியம் கணக்கிட மாதாந்திர உட்சவரம்பு ரூபாய் 7000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டி உள்ள பொதுத் துறை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் எனவும் நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.