மிச்சாங் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு,ம் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான சுற்று அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ளார்.