தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

January 13, 2024

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்க உள்ளார். இதில் திருவள்ளுவர் விருதினை தவத்திரு.பாலமுருகனடிமை சுவாமி பெறுகிறார். பேரறிஞர் அண்ணா விருதினை பத்தமடை பரமசிவம் அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் விருதினை உ.பலராமன் அவர்களும், மகாகவி பாரதியார் விருதினை கவிஞர்.பழனி பாரதி அவர்களும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை எழுச்சி கவிஞர்.முத்தரசு அவர்களும், திரு.வி.க விருதினை […]

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்க உள்ளார். இதில் திருவள்ளுவர் விருதினை தவத்திரு.பாலமுருகனடிமை சுவாமி பெறுகிறார். பேரறிஞர் அண்ணா விருதினை பத்தமடை பரமசிவம் அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் விருதினை உ.பலராமன் அவர்களும், மகாகவி பாரதியார் விருதினை கவிஞர்.பழனி பாரதி அவர்களும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை எழுச்சி கவிஞர்.முத்தரசு அவர்களும், திரு.வி.க விருதினை ஜெயசீல ஸ்டீஃபன் அவர்களும், கி.ஆ.பெ விசுவநாதம் விருதினை முனைவர். இரா. கருணாநிதி அவர்களும் பெறுகிறார்கள். மேலும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu