தமிழக அரசு இணைய வழியில் கட்டிட அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடிவரையில் தரைத்தளம் அல்லது தரைதளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்புகளுக்கான சான்றிதழ்களை இணைய வழியில் பெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் மக்கள் சதுர அடிக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் தர நிலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசன்ஸ் கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலநிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்தும் உள்ளடங்கி இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சதுர அடிக்கு ரூபாய் 100 கட்டணம் ஆக செலுத்த வேண்டும்.அடுத்ததாக சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூபாய் 88-ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூபாய் 84 - ம் தேர்வு நிலை மாநகராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூபாய் 74 - ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நகராட்சி,மாநகராட்சிகள், கிராம ஊர் போன்றவைகளும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது