வளாகங்களுக்கு சுகாதார சான்றிதழ் தமிழ்நாடு இ-சேவை தளத்தில் எளிதில் பெறலாம்.
கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரச் சான்றிதழ் கட்டாயமாக உள்ளது. இதை எளிமைப்படுத்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய முறைமையை அறிமுகம் செய்துள்ளது. இனிமேல் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவே சான்றிதழ் பெற வேண்டும். தேவையான ஆவணங்கள், சுய உறுதிமொழி சான்றிதழ் உள்ளிட்டவை பதிவேற்றியவுடன், சான்றிதழ் தானாக உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய முடியும். இது ஒரு வருடம் செல்லுபடியாகும். சுகாதார நெறிமுறைகளை மீறினால் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்பதால், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.