உலகின் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்கள் பட்டியலை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் என் பி சி ஐ மற்றும் மீஷோ ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
என் பி சி ஐ நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது. இந்தியாவை டிஜிட்டல் கட்டண முறைக்கு நகர்த்தியதில் என் பி சி ஐ பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், யுபிஐ பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்து, இந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூர், அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் யு.பி.ஐ பரிவர்த்தனை முறையை கிரகித்துக் கொள்வதற்கு என் பி சி ஐ வழி வகுத்துள்ளது. இதே காரணத்திற்காக நிறுவனம் செல்வாக்கு மிக்க நிறுவனங்களுள் இடம் பெற்றுள்ளதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மீஷோ நிறுவனம், விற்பனையாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறாமல், இணைய வர்த்தகத்தை அறிமுகம் செய்தது. முன்னணி இணைய வர்த்தக தளங்களுக்கு இணையாக இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி கண்டது. சாதாரண மக்களை இணைய வர்த்தகத்தை நோக்கி நகர்த்தியதில் பெரும்பங்கு வகித்துள்ளது. இந்த காரணங்களுக்காக பட்டியலில் மீஷோ இடம்பெற்றுள்ளதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் தவிர, 4 இந்தியர்கள் தொடங்கிய பாலிகான் லேப்ஸ் நிறுவனமும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது பிளாக்செயின் முறையில் இயங்கும் நிறுவனம் ஆகும். டைம்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், ஆப்பிள், ஸ்பேஸ் எக்ஸ், ஓபன் ஏஐ, நிவிடியோ, டேகோ பெல், எல் வி எம் ஹச், ஐ பி எம், சாம்சங், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














