இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிகழ் நேர கட்டண தொடர்பை (Real Time Payment Link) ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசிய கட்டணங்கள் கழகம் - என் பி சி ஐ, இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, எல்லை தாண்டிய கட்டணங்கள் மிகவும் எளிமையாக கையாளப்படும்.
தேசிய கட்டணங்கள் கழகம் - என்பிசிஐ, பல்வேறு இந்திய வங்கிகளுடன் இணைந்து யுபிஐ கட்டண முறைகளை பரிசோதித்து வருகிறது. அதாவது, பல்வேறு வெளிநாட்டு வங்கிகளுடன் இணைந்த முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் மிகக் குறைந்த கட்டணங்களுக்கு இந்த நிகழ் நேர கட்டண முறை அமல்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் அனைத்து வித கட்டணங்களுக்கும் இது செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.