உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி என்விடியா நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்ததை அடுத்து அதன் சந்தை மதிப்பு 3.34 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதால், என்விடியா நிறுவனத்தின் வளர்ச்சி அளவிட முடியாததாக உள்ளது. நிகழாண்டில் மட்டும் 170% அளவுக்கு கூடுதலாக என்விடியாவின் பங்குகள் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1100% உயர்ந்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்களில் இருந்து 3 ட்ரில்லியன் டாலர்களாக உயர்வதற்கு 96 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்த உயர்வை மைக்ரோசாஃப்ட் 945 நாட்களிலும், ஆப்பிள் 1044 நாட்களிலும் எட்டியது குறிப்பிடத்தக்கது.