அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நைக்கா நிறுவனம், 68% லாப இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நைக்கா நிறுவனத்தின் நிகர லாபம் 9 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது 29 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் வருடாந்திர அடிப்படையில் 33% உயர்ந்து, 1462 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் செலவினங்கள் 36% உயர்ந்து, 1455 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் EBITDA மதிப்பு 13% உயர்ந்து, 78 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டில், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2% வரை சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வியாபார மதிப்பு 37% உயர்ந்து, 2796 கோடியாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.