அமெரிக்கா - அலாஸ்கா வான்பகுதியில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது

February 11, 2023

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில், சுமார் 40,000 அடி உயரத்தில், வான் பகுதியில் மர்ம பொருள் ஒன்று பறந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மர்ம பொருளை, F-22 ரேப்டர் ரக ஜெட் விமானம் கொண்டு, AIM-9X ஏவுகணையை ஏவி, சுட்டு வீழ்த்தியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இது சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில், சுமார் 40,000 அடி உயரத்தில், வான் பகுதியில் மர்ம பொருள் ஒன்று பறந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மர்ம பொருளை, F-22 ரேப்டர் ரக ஜெட் விமானம் கொண்டு, AIM-9X ஏவுகணையை ஏவி, சுட்டு வீழ்த்தியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இது சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், இந்த செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள், அமெரிக்கா - கனடா எல்லையில் அமைந்துள்ள நீர் நிலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே, அதனை மீட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மர்ம பொருள் சீன உளவு பலூனை விட அளவில் சிறியதாக, ஒரு கார் அளவில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த பொருளுக்கான நோக்கம் என்ன?, இது அரசாங்கத்திற்கு சொந்தமானதா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்த விவரங்கள் ஆராய்ச்சியில் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu