இஸ்ரேல் பணய கைதிகள் 50 பேருக்கு ஈடாக 300 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

November 23, 2023

இஸ்ரேலில் கடத்தப்பட்ட பிணை கைதிகள் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 13,000 மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அரசிடையே சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான்கு நாட்களுக்கு காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஹமாசிடமிருந்து மீட்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது. இரு தரப்பிலும் கைதிகளை விடுவிப்பது […]

இஸ்ரேலில் கடத்தப்பட்ட பிணை கைதிகள் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 13,000 மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அரசிடையே சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான்கு நாட்களுக்கு காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஹமாசிடமிருந்து மீட்பதில் இஸ்ரேல் அரசு உறுதியாக உள்ளது. இரு தரப்பிலும் கைதிகளை விடுவிப்பது என்று ஒப்பந்தம் ஆகியுள்ளது. அதன் அடிப்படையில் இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவித்து அதற்கு ஈடாக 50 பிணை கைதிகளை ஹமாசிடமிருந்து பெறுவது என்று முடிவாகியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் நீதி அமைச்சகம் பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 300 கைதிகளின் விவரங்கள் உள்ளன. எனவே 300 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu