அதிகாரிகள் மக்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் 

மக்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் கூறுகையில், தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். மக்கள் பணியை […]

மக்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் கூறுகையில், தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும். ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu