உயர்த்தப்படாத பெட்ரோல் டீசல் விலையால் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்

October 12, 2022

இந்தியாவில், பல மாதங்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் உள்ளன. இதனால், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இழப்பை சந்தித்து வருகின்றன. இதுபோல தொடர் இழப்பில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்களின் […]

இந்தியாவில், பல மாதங்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் உள்ளன. இதனால், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இழப்பை சந்தித்து வருகின்றன. இதுபோல தொடர் இழப்பில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறித்து ஐ சி ஐ சி ஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேற்குறிப்பிட்ட மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு 21270 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 18480 கோடி ரூபாய் இழப்பு பதிவாகி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு மூலம், முதல் காலாண்டில் இந்த நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனையில், விலைகள் உயர்த்தப்படாததால் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில், இரண்டாவது காலாண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி மற்றும் அதன் விற்பனை விலை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி குறைந்தது. இதனால் நிறுவனங்களின் நிதி நிலை மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், ஒரு பேரலுக்கு 5.6 டாலராக இருந்த இழப்பு, இரண்டாவது காலாண்டில் 15.9 டாலராக உயர்ந்துள்ளது. உயர்தர எரிபொருள் விற்பனையால் கடந்த காலாண்டில் 14.4 ரூபாய் இழப்பு நேரிட்ட நிலையில், இரண்டாவது காலாண்டில் 9.8 ரூபாயாக இழப்பு குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு வருவாய் குறித்த தகவல்களை விரைவில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐ ஓ சி நிறுவனத்தின் இழப்பு 6300 கோடி ரூபாயாகவும், பிபிசிஎல் நிறுவனத்தின் இழப்பு 6900 கோடி ரூபாயாகவும், எச்பிசிஎல் நிறுவனத்தின் இழப்பு 8,100 கோடி ரூபாயாகவும் பதிவாகும் என்று ஐ சி ஐ சி ஐ செக்யூரிட்டிஸ் கணித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu