இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
யுனெஸ்கா உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் பேலூர், ஹாலோபித் மற்றும் சோமநாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோயில்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் 42வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்று அந்தஸ்து கிடைத்துள்ளது. பிரதமர் மோடி சமூக ஊடகப் பதிவில் உலக பாரம்பரிய பட்டியலில் பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஓய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களைக் கொண்டுள்ள பாரம்பரிய தேர்வுக்கான சான்றாக திகழ்கிறது. இது நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்பான கைவினைத் திறனை விளக்கும் வகையில் இருக்கின்றது என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.