பிரபல மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஒக்காயா, தனது புதிய மாடல் மின்சார ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒக்காயா ஃபாஸ்ட் எப் 2 எப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை 84,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இருசக்கர வாகனத்திற்கு 2 வருடம் அல்லது 20000 கிலோமீட்டர் வரை பேட்டரி மற்றும் மோட்டார் வாரண்டியை ஒக்காயா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த வாகனத்தில், 2.2 KWh லித்தியம் அயன் LFP பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை, ஒருமுறை சார்ஜ் செய்தால், 70 முதல் 80 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய, 4 முதல் 5 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 800W பிஎல்டிசி ஹாப் மோட்டார் மூலம் 50 முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனம் 6 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒக்காயா ஃபாஸ்ட் எப் 2 எப் மூலம், மின்சார வாகனத் துறையில், புதிய தர நிர்ணயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்சுல் குப்தா தெரிவித்துள்ளார்.














