பெருநகரங்களில் போக்குவரத்து நெருக்கடிக்கு மாற்றாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற டாக்சி, பைக் டாக்சி சேவைகளுக்கு மத்திய அரசு புதிய கட்டண அனுமதியை வழங்கியுள்ளது.
இனிமேல் பீக் ஹவர்ஸ் நேரங்களில், ஓலா மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்கள் வழக்கமான கட்டணத்திலிருந்து 2 மடங்கு அதிகமாக வசூலிக்கலாம். இதற்கு முன் அந்த உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்தது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இத்தகவலை திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுடன் வெளியிட்டுள்ளது. மேலும், பயணத்தை ஓட்டுநர் அல்லது பயணி சரியான காரணமின்றி ரத்து செய்தால், ரூ.100 வரை அபராதம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் நேரத்தையும் நிதியையும் பாதுகாக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண மரியாதைகள், சேவைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதனால் பயணச் செலவில் கூடுதல் சுமை ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.