வாடகை வாகனத் துறையில் பிரபலமான நிறுவனமான ஓலா, பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஓலா செயலியைப் பயன்படுத்தி வாகனங்களைப் பதிவு செய்யும் மென்பொருள் சேவை அங்கிருந்து வழங்கப்படுகிறது. இந்த மென்பொருள் பிரிவில் பணியாற்றி வந்த 200 மென்பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக ஓலா அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது.
மேலும், 500 பொறியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், முதல் கட்டமாக 200 பொறியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் ஓலா அறிவித்துள்ளது. ஒரே முறையில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதைத் தவிர்க்க, முதல் கட்டமாக 200 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மென் பொறியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.