ஓலா நிறுவனம், தீபாவளிக்கு 80000 ரூபாயில் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது

October 10, 2022

கடந்த வருடத்தில் ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. அதன் எக்ஸ் ஷோரூம் விலை 99,999 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, வரும் தீபாவளிக்கு, புதிய மின்சார ஸ்கூட்டர் ஒன்றை 80000 ரூபாய்க்கும் கீழ் விற்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இந்த வருட அக்டோபர் மாதத்தில், எங்கள் நிறுவனம் பெரிய வெளியீடு ஒன்றை அறிவிக்கிறது. இது வாகனத் […]

கடந்த வருடத்தில் ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. அதன் எக்ஸ் ஷோரூம் விலை 99,999 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, வரும் தீபாவளிக்கு, புதிய மின்சார ஸ்கூட்டர் ஒன்றை 80000 ரூபாய்க்கும் கீழ் விற்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இந்த வருட அக்டோபர் மாதத்தில், எங்கள் நிறுவனம் பெரிய வெளியீடு ஒன்றை அறிவிக்கிறது. இது வாகனத் துறையில் ஐ சி என்ஜின் அத்தியாயத்தை நிறைவு செய்யும் புரட்சிகர அறிவிப்பாக இருக்கும். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இந்தப் புரட்சி நடந்தேறும்" என்று பதிவிட்டுள்ளார்.

ஓலா நிறுவனம் தற்போது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற பெயரில் அதிநவீன மின்சார வாகனங்களை இயக்கி வருகிறது. ஓலா நிறுவனத்தின் மூவ் ஓ எஸ் என்ற மென்பொருள் இயங்கு தளத்தில் இந்த ஸ்கூட்டர்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இசை கேட்பது, மேப் போடுவது, ரிவர்ஸில் செல்வது போன்ற நவீன அம்சங்களும் ஓலா எஸ்1 ரக ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ளன. தற்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மின்சார ஸ்கூட்டரிலும், எஸ் 1 ஸ்கூட்டரில் இருந்த அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூவ் ஓ எஸ் இயங்கு தளத்தில் இயங்கும் வகையிலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மின்சாரக் கார் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர்கள் வரை செல்லும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில், ஒரு நாளைக்கு 1000 மின்சார ஸ்கூட்டர்கள் விற்கப்படுவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து தீ விபத்துக்குள்ளாகி வருவதால், பாதுகாப்பு கருதி, இந்த ஸ்கூட்டர்களை வாங்க, பொது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதே நிதர்சனம். வரவிருக்கும் புதிய ரக மின்சார ஸ்கூட்டர் இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu