ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகமான மூன்று நாட்களிலேயே 71% உயர்ந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மதிப்பு ரூ.51,000 கோடியைத் தாண்டியுள்ளது.
சந்தை நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) எதிர்மறையாக இருந்தபோதிலும், பங்கு ரூ.76-ல், அதாவது IPO விலையில் பட்டியலிடப்பட்டது. பங்கு வெளியிடப்பட்ட விலையான ரூ.76-ல் இருந்து 71% உயர்ந்து, ரூ.130ஐ எட்டியது. மின்சார இருசக்கர வாகன சந்தையில் 35% பங்குடன் முன்னணி வகிக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் வாரிய கூட்டம் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற உள்ளது. அப்போது, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.