ஓலா நிறுவனத்தில் 130 முதல் 200 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்தப் பணி நீக்கம், மின்சார வாகனத் துறை, தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல துறைகளில் பரவலாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஓலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “நிறுவனத்தில், பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதன் பகுதியாக, வடிவமைப்பு மற்றும் பொறியியல் சார்ந்த திறமை வாய்ந்த பணியாளர்களை புதிதாக பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், 200 பொறியாளர்கள் வரை பணி நீக்கம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த பணி நீக்க நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், புதிதாக பணி அமர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையாக இவை மேற்கொள்ளப்படுகின்றன” என்று கூறினார்.