டன்சோ நிறுவனத்துக்கு போட்டியாக பார்சல் டெலிவரி சேவையில் களமிறங்கும் ஓலா

October 10, 2023

பார்சல் டெலிவரி சேவையில், ஓலா நிறுவனம் புதிதாக களமிறங்கி உள்ளது. இது, அந்த துறையில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் டன்சோ நிறுவனத்துக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.ஓலா நிறுவனத்தின் மின்னணு வாகன தயாரிப்பு பிரிவு, பார்சல் சேவையில் களமிறங்கி உள்ளது. ‘ஓலா பார்சல்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் வீடு தேடி பொருட்களை கொண்டு சேர்க்க உள்ளது. முதற்கட்டமாக, பெங்களூருவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மட்டுமே இந்த சேவைக்கு பயன்படுத்தப்படுவதால், காற்று மாசு குறைக்கப்படுவதாக ஓலா […]

பார்சல் டெலிவரி சேவையில், ஓலா நிறுவனம் புதிதாக களமிறங்கி உள்ளது. இது, அந்த துறையில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் டன்சோ நிறுவனத்துக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.ஓலா நிறுவனத்தின் மின்னணு வாகன தயாரிப்பு பிரிவு, பார்சல் சேவையில் களமிறங்கி உள்ளது. ‘ஓலா பார்சல்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் வீடு தேடி பொருட்களை கொண்டு சேர்க்க உள்ளது. முதற்கட்டமாக, பெங்களூருவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மட்டுமே இந்த சேவைக்கு பயன்படுத்தப்படுவதால், காற்று மாசு குறைக்கப்படுவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவேஷ் அகர்வால் இது குறித்து பேசுகையில், 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பார்சல் சேவை செய்ய, 25 ரூபாய் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், விரைவில் இந்தியாவின் பிற நகரங்களிலும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu