மின்சார வாகன தொழிற்சாலைக்காக, தமிழ்நாட்டில் 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய ஓலா

January 6, 2023

ஓலா எலக்ட்ரிக்ஸ் நிறுவனம், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, தமிழ்நாட்டில் 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி செல் உற்பத்தி ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மின்சார வாகனப் பூங்கா அமைப்பதற்கு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை அடுத்த பத்து […]

ஓலா எலக்ட்ரிக்ஸ் நிறுவனம், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, தமிழ்நாட்டில் 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி செல் உற்பத்தி ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தியை ஓலா நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மின்சார வாகனப் பூங்கா அமைப்பதற்கு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை அடுத்த பத்து ஆண்டுகளில் முதலீடு செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ஓலா நிறுவனத்திற்கு 500 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், மேலும் 1500 ஏக்கர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu