ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு மற்றும் வாகனங்கள் தயாரிப்புக்காக 920 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மின்சார 4 சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கான 20 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ள ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மதிப்பு 7614 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய முதலீடுகள் மூலம் 3111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஓலா நிறுவனம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.