மேற்காசியா மற்றும் அமெரிக்க தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் நிதியை திரட்டும் திட்டத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை காரணமாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில், ஓலாவின் பங்குகள் 40% லிருந்து 37 முதல் 38% வரை குறையும். மேலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில், முதல் முதலாக முதலீடு செய்த சாஃப்ட்பேங்க் பங்குகள் 20% க்கும் கீழே குறையும். அதே வேளையில், நிறுவனத்தின் பங்குகளை விற்கும் எண்ணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வருடம் ஜனவரி மாதத்தில், 200 மில்லியன் டாலர்களை ஓலா எலக்ட்ரிக் திரட்டியது. Tekne Private Ventures, Alpine Opportunity Fund, Edelweiss உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி திரட்டப்பட்டது. இந்நிலையில், புதிதாக பெறப்படும் நிதி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பேட்டரிகள் உற்பத்திக்காக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.