பழைய ஓய்வூதியத் திட்டம் கோரிக்கைகள்: ஜாக்டோ-ஜியோ 2 ஆம் கட்டப் போராட்ட அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஜாக்டோ-ஜியோ 2 ஆம் கட்டப் போராட்ட அறிவிப்பு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, கடந்த மார்ச் 23-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் நடைபெற்ற மாநில […]

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஜாக்டோ-ஜியோ 2 ஆம் கட்டப் போராட்ட அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, கடந்த மார்ச் 23-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

இதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில், வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி மற்றும் மே 24-ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு செய்ய வேண்டும் என ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu