ஒலக்ட்ரா கிரீன்டெக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய ஹைட்ரஜன் பேருந்தை வெளியிட்டுள்ளது. இந்த பேருந்தின் மூலம், பொதுப் போக்குவரத்து ‘கார்பன் இல்லாத முறைக்கு’ மாறும் என்று தெரிவித்துள்ளது.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஒலக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட், இந்த ஹைட்ரஜன் பேருந்தை தயாரித்துள்ளது. இதனை விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் பேருந்து 12 மீட்டர் நீளமுடைய, குறைந்த உயர தரை கொண்ட பேருந்தாகும். இதில் ஓட்டுனர் இருக்கை தவிர 32 முதல் 49 இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை ஹைட்ரஜனை நிரப்பினால், இந்த பேருந்து 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைட்ரஜனை முழுமையாக நிரப்ப 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.