ஆம்னி பஸ் கட்டணத்தால் ஏழைகளுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் சிவசங்கர் கருத்து

September 28, 2022

ஆம்னி பஸ் கட்டணம் உயர்வால் ஏழைக்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால், வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக பலரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் பயணக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் […]

ஆம்னி பஸ் கட்டணம் உயர்வால் ஏழைக்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால், வெளியூரில் தங்கி இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக பலரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் பயணக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆம்னி பஸ் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. அரசு பஸ்களில் பயணிக்காதவர்கள், ஆம்னி பஸ் கட்டணத்தை தெரிந்துக் கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆம்னி பஸ்கள் சேவையின் அடிப்படையில் இயங்க முடியாது. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியதால் ஓரிரு நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டண விவரத்தை அறிவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu