பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்காக 11ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் 12,13, 14 ஆகிய நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட 8,000 க்கும் மேலான சிறப்பு பரிசுகள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஆம்னி பேருந்துகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைகாலம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றை கொண்டு ஆம்னி பேருந்து கட்டணம் மிகக் கூடுதலாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து ரயில்களிலும்,வந்தே பாரத் ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பிவிட்டன. அரசு பஸ்,ஆம்னி பஸ் மட்டுமே ஒரே வழி என்ற நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றன.