மழை பாதித்த மாவட்டங்களுக்கு தினசரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 84.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மழை பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.