பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.
தீபாவளி,பொங்கல், கிறிஸ்மஸ் பண்டிகை போன்ற பண்டிகை காலங்களில் சென்னை வாழ் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்காக டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் மேற்கொள்வார்கள். ஊர்களுக்கு செல்வதற்காக எவ்வளவு கட்டணம் விதித்தாலும் அதனை செலுத்தி பயணம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இதை குறி வைத்து ஆம்னி பஸ்கள் 2000 முதல் 4000 வரை கட்டணம் நிர்ணயித்து வருகின்றனர். இது போன்ற ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து அனுமதி இன்றி பஸ்களை இயக்குதல் அதிக கட்டணம் வசூலித்தல் ஆகிய விதி மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சுமார் 70 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் மீது இதுவரை ரூபாய் 17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.