ஓணம் பண்டிகையை முன்னிட்டு தேக்கடியில் இன்று முதல் (செப்.8) மூன்று நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகு சவாரி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை தொடர்ந்து தனியார் துறை சார்பில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு (செப்.10 வரை) குமுளி அருகே பத்து முறியில் இருந்து ஹெலிகாப்டர் சுற்றுலா துவக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் பயணிக்கலாம்.
பத்து நிமிடங்கள் தேக்கடி நீர்த்தேக்கப்பகுதி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி காட்டப்படுவதற்காக ஒரு நபருக்கு ரூ.3500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.