விண்வெளியில், விரைவில் மிகப்பெரிய அளவிலான நட்சத்திர வெடிப்பு ஏற்படுகிறது. இதனை பூமியிலிருந்து நம்மால் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. நம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அரிதாக நிகழும் வானியல் நிகழ்வாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில், T Coronae Borealis என்ற நட்சத்திரம் உள்ளது. பூமியின் அளவு கொண்ட இந்த நட்சத்திரம் விரைவில் வெடித்துச் சிதற உள்ளது. தற்சமயம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த நிகழ்வு ஏற்படலாம் என நாசா தெரிவித்துள்ளது. வெடிப்பு நிகழும் சமயத்தில் ஒரு வார காலத்துக்கு இதன் பிரகாசத்தை பூமியிலிருந்து காண முடியும் என கூறியுள்ளது. வானியல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வை காண ஆர்வமுடன் உள்ளனர்.