ஜொமாட்டோ ஸ்விக்கியை விட குறைந்த விலையில் உணவு டெலிவரி - ஓஎன்டிசி அறிவிப்பு

இந்தியாவின் உணவு விநியோக வர்த்தகத்தை பொறுத்தவரை, ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று சரிசமமான போட்டி நிலையில் உள்ளன. இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக, அரசாங்கத்தின் இணைய வர்த்தக தளமான ஓஎன்டிசி களம் இறங்கியுள்ளது. நேரடியாக, உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய ஓஎன்டிசி திட்டமிட்டுள்ளது. அதாவது, ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற மூன்றாம் நிறுவனத்தின் துணை எதுவும் இல்லாமல், வாடிக்கையாளருக்கு நேரடியாகவே உணவு விநியோகிக்கப்படும். எனவே, உணவின் விலை மிக குறைவாக இருக்கும் […]

இந்தியாவின் உணவு விநியோக வர்த்தகத்தை பொறுத்தவரை, ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று சரிசமமான போட்டி நிலையில் உள்ளன. இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக, அரசாங்கத்தின் இணைய வர்த்தக தளமான ஓஎன்டிசி களம் இறங்கியுள்ளது. நேரடியாக, உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய ஓஎன்டிசி திட்டமிட்டுள்ளது. அதாவது, ஜொமாட்டோ, ஸ்விக்கி போன்ற மூன்றாம் நிறுவனத்தின் துணை எதுவும் இல்லாமல், வாடிக்கையாளருக்கு நேரடியாகவே உணவு விநியோகிக்கப்படும். எனவே, உணவின் விலை மிக குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இணைய வர்த்தக தளமான ஓஎன்டிசிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அண்மையில், நாள் ஒன்றுக்கு 10000 ஆர்டர்களை கடந்து ஓஎன்டிசி சாதனை படைத்தது. இந்நிலையில், உணவு விநியோக வர்த்தகத்தில் ஓஎன்டிசி களமிறங்க உள்ளது. தற்போதைய தகவலின் படி, ஸ்விக்கியில் 209 ரூபாய், ஜொமாட்டோவில் 212 ரூபாய் என்று குறிக்கப்படும் உணவின் விலை, ஓஎன்டிசியில் வெறும் 147 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. எனவே, ஓஎன்டிசி தளத்திற்கு ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu