ஒரே நாடு ஒரே தேர்தல்: பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்த மத்திய அரசு

December 19, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டிய தேவையை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை வழங்கியது, இதில் 18 சட்டத்திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகள் அடிப்படையில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய […]

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டிய தேவையை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை வழங்கியது, இதில் 18 சட்டத்திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகள் அடிப்படையில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை அடுத்து, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுக்குழுவில் 31 உறுப்பினர்கள், இதில் 21 மக்களவை மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu